இன்று யாரும் வேலைக்கு செல்ல வேண்டாம்… சம்பளம் உண்டு… அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் வாக்களிக்க ஏதுவாக இன்று அனைத்து தொழிலாளர்களுக்கும் ஊதியத்துடன் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் வாக்களிக்க முடியாது.

இந்நிலையில் வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக இன்று அனைத்து தொழிலாளர்களுக்கும் ஊதியத்துடன் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஊதியத்துடன் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். 9487269270, 9442540984, 8610308192, 04424335107 ஆகிய எண்களில் தொழிலாளர்கள் புகார் அளிக்கலாம்.