இன்று முதல் மீண்டும் ஊரடங்கு… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்படும் என்று அம்மாநில அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போதைய உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் இன்னும் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

அதனால் பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் விதித்துள்ளன. அதன்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இன்று இரவு முதல் ஜனவரி மாதம் 5ஆம் தேதி வரை இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். மேலும் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வரும் பயணிகள் 15 நாட்கள் கட்டாயமாக தனிமைப்படுத்தப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.