இன்று முதல் நாகர்கோவில் – திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் சேவை…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…..!!!

குடியரசு தினத்தை முன்னிட்டு நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் சேவை இன்று முதல் தொடங்கும் என தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையிலிருந்து நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலிக்கு இன்று  ஜனவரி 25ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன்படி தாம்பரத்திலிருந்து ஜனவரி 25ஆம் தேதி இரவு 10.20 மணிக்கு புறப்படும் சிறப்பு அதிவிரைவு ரயில் மறுநாள் காலை 10.50 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

பின்னர் ஜனவரி 29ஆம் தேதி மாலை 4.15 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும். அதனைப் போலவே சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனவும் இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருதாச்சலம், திருச்சி, திண்டுக்கல் , மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர்,புதுக்கோட்டை வழியாக செல்லும்  என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Leave a Reply