தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக ஒவ்வொரு மாதத்திலும் அனைத்து மாவட்டங்களிலும் இரண்டு முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் லட்சக்கணக்கான இளைஞர்கள் பயனடைந்து வருகின்றன. தமிழக அரசு தனியார் நிறுவனங்களுடன் இணைந்து இந்த வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது.
அவ்வகையில் தற்போது திருவள்ளூர் மாவட்ட தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் ஜனவரி 13ஆம் தேதி தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருபதுக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ளும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் வரை அனைவரும் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த அரிய வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.