தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தில் இரண்டு முறை அரசு தனியார் துறையுடன் இணைந்து வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. அதற்கான அறிவிப்புகள் முன்னரே வெளியிடப்பட்டு வரும் நிலையில் தற்போது பிப்ரவரி நான்காம் தேதி சனிக்கிழமை மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாமை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊடகம் மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க மகளிர் திட்டம் இணைந்து நடத்துகின்றது.

இந்த முகாம் பிப்ரவரி நான்காம் தேதி சீர்காழியில் உள்ள விவேகானந்தா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் காலை 8.30 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். இந்த முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிவு படித்தவர்கள் வரை அனைவரும் பங்கேற்கலாம். இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் எனவும் இது குறித்த கூடுதல் விவரங்களை அறிய என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.