கிரிக்கெட் பிரீமியர் லீக்கில் இன்று நடைபெறும் இரண்டு ஆட்டங்களில் முதல் போட்டியில் பெங்களூரு- ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.
பெங்களூரு அணியில் கேப்டன் கோலி தொடர்ந்து சொதப்பி வருகிறார். படிக்கல், டிவிலியர்ஸ் ஆகியோர் பார்மில் இருப்பது அணிக்கு பலம். பந்துவீச்சில் பெங்களூரு அணியின் சைனி இன்றும் சிறப்பாக ஆடுவார் என்று எதிர்பார்க்கலாம். ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை சஞ்சு சாம்சன், கேப்டன் ஸ்மித், ராகுல் ஆகியோர் அற்புதமாக பார்மில் உள்ளனர். பந்துவீச்சில் ஆர்ச்சர், கரன், கோபால் ஆகியோர் வலு சேர்ப்பர்.
இரு அணிகளும் 20 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளனர். அதில் ராஜஸ்தான் 10 ஆட்டங்களிலும், பெங்களூரு 8 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. மற்றொரு ஆட்டத்தில் டெல்லி-கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஷார்ஜாவில் நடைபெறும் இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் மோதிய 3 ஆட்டங்களில் இரண்டில் வென்று உள்ளதால் இப்போட்டி பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.