ஸ்ரீரடி சாய் தர்ஷன் சார்பாக கேரள மற்றும் மகாராஷ்டிரா இடையே பாரத கௌரவம் சிறப்பு ரயில் இன்று  ஜூன் 5ஆம் தேதி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கேரள மாநிலம் கொச்சுவேலியில் இருந்து  ஜூன் 5-ம் தேதி காலை 9 மணிக்கு புறப்படும் இந்த ரயில் செங்கோட்டை, தென்காசி, மதுரை, திருச்சி, செங்கல்பட்டு மற்றும் சென்னை எழும்பூர் வழியாக ஜூன் ஏழாம் தேதி காலை 7.25 மணிக்கு மகாராஷ்டிரா மாநிலம் சாய் நகர் சீரடி சென்றடையும்.

அதன் பிறகு மறுமார்கமாக சீரடியில் இருந்து ஜூன் 8-ம் தேதி இரவு 8 மணிக்கு புறப்பட்டு ஜூன் 11ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு கொச்சுவெலி சென்றடையும். மேலும் இந்த ரயில் கொச்சு வேலி, ஸ்ரீரடி, நாசிக், பந்தர்ப்பூர் மற்றும் மந்திராலயம் ஆகிய சுற்றுலாத்தலங்கள் வழியாக செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது