இன்று கோவிஷில்டு முதல் & இரண்டாம் டோஸ்…. மறக்காம வந்து போட்டுக்கோங்க…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து  மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களும் ஆர்வகமாக் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று பொது மக்களுக்கு கோவிஷீயீல்டு முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி போடப்படும் என்று சேலம் மாநகராட்சி அறிவித்துள்ளது. 138 மையங்களிலும் தடுப்பூசி போடப்படுகிறது. போதுமான கையிருப்பு இல்லாத காரணத்தினால் கோவாக்சின் தடுப்பூசி போட இயலாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போட வருபவர்கள் முகக் கவசம் அணிந்தும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் போட்டு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளபடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *