பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் ரவி உரையுடன் தொடங்குகிறது. இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் என்பதால் தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் ரவி வாசிப்பார். அதனைத் தொடர்ந்து பேரவை தலைவர் தலைமையிலான அலுவல் ஆய்வுக் குழு கூடி சபையை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என தீர்மானிக்கும். வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.