இன்று (பிப்ரவரி 18ஆம் தேதி) கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மகாசிவராத்திரியை முன்னிட்டு இந்த விடுமுறை அளிக்கப்படுவதாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இன்று ( சனிக்கிழமை) நாடு முழுவதும் மகாசிவராத்திரி விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.