இன்று இரவு முதல் அதிகாலை வரை… புரட்டிப் போடும் புயல்… உஷாரா இருங்க…!!!

தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை புயல் கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் தீவிர புயலாக உருவாகியுள்ள நிவர் புயல் அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுவடைந்து 6 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் புயல்மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே இன்று இரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த நிலையில் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரையில் கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதனால் நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, திருவாரூர் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் காற்றின் வேகம் 140 கிமீ வரையில் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது. புயல் தொடர்பான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளது.