இன்று இந்த 11 மாவட்டங்களில்…. மழை வெளுத்து வாங்கும்…. வானிலை மையம் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க ஆரம்பித்துவிட்டது. இதற்கு மத்தியில்  தமிழ்நாட்டில் வெப்பச்சலனம், வளிமண்டல சுழற்சியால் ஒருசில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது. அந்தவகையில் நேற்று சென்னையில் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் போல தேங்கி காட்சியளிக்கிறது. இவ்வாறு தமிழ்நாட்டின் பல இடங்களிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, கோவை, தேனி, சேலம், ஈரோடு, வேலூர், தர்மபுரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு  கடல் பகுதிக்கு அடுத்த 5 நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *