இன்று இந்த பகுதிகளில்…. காலை 9.45 முதல் 2 மணி வரை…. மின்விநியோகம் இருக்காது…!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக பின்வரும் நாட்களில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

அந்தவகையில் திருச்சியில் இன்று  (டிசம்பர் 07) பராமரிப்புப் பணி காரணமாக காலை 9. 45 மணி முதல் மதியம் 2 மணி கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. அதன்படி திருச்சி எல்.அபிஷேகபுரம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், லால்குடி, ஏ.கே.நகர், பரமசிவபுரம், சீனிவாசபுரம், வரதராஜ நகர், பச்சண்ணபுரம், சிறுதையூர், உள் நகர், பாரதி நகர், விஓசி நகர், காமராஜ் நகர், பாலாஜி நகர், ஆங்கரை, மலையப்பபுரம், கூகூர், இடையாற்றுமங்கலம், மும்முடிசோழ மங்கலம், பெரியவர் சீலி, மயிலரங்கம், மேல வாழை, கிருஷ்ணாபுரம், சேஷசமுத்திரம், பம்பரம் சுற்றி ஆகிய பகுதிகள் மின் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *