இன்றுடன் முடியும் அக்னி நட்சத்திரம்…. ஆனால் கொஞ்ச நாள் இப்படித்தான் இருக்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!!

அக்னிநட்சத்திரம் தொடங்கிய சென்ற 4ஆம் தேதி முதல் வெயில் கொளுத்தியது. இருப்பினும் ஒரு வாரத்திலேயே சென்னை மற்றும் தமிழகம் முழுதும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. மேலும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்தது. இந்த வருடம் அக்னி நட்சத்திரத்தில் சென்ற 6 ஆம் தேதி வேலூரில் அதிகபட்சம் 105.98 டிகிரி வெப்பம் பதிவாகியது.

இருந்தாலும் அசானி புயல், வளிமண்டலம் மேலடுக்குசுழற்சி, வெப்பசலனம் போன்ற காரணங்களால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அக்னிநட்சத்திர காலகட்டத்தில் அவ்வப்போது மழை பெய்தது. இதன் காரணமாக இந்த வருடம் அக்னிநட்சத்திரம் கோடைக்காலத்தில் முதல் 2 வாரங்களுக்கு வெப்பம் தணிந்தே காணப்பட்டது. இந்நிலையில் சென்ற 3 நாட்களுக்கு முன் தமிழகம் முழுதும் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்தது.

இதன்காரணமாக பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி வாட்டி வதைத்தது. சென்னையில் அதிகபட்சம் சென்ற 23, 24-ம் தேதிகளில் 104 டிகிரி வெப்பம் பதிவாகியது. கடந்த மே 24 ஆம் தேதி தமிழ்நாட்டின் 13 இடங்களில் வெயில் 100டிகிரிக்கு மேல் பதிவாகியது. சென்னை மீனம்பாக்கத்தில் நேற்றுகாலை 102.38 டிகிரியும், நுங்கம்பாக்கத்தில் 100.94 டிகிரியும் வெப்பம் பதிவாகியிருக்கிறது. அக்னிநட்சத்திரம் இன்று முடிவடைந்தாலும் மேலும் சில தினங்களுக்கு வெயிலின் தாக்கமானது அதிகமாகவே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *