இன்று  முதல் யுஜிசி நெட் தேர்வுகள் தொடங்குகின்றன. முதற்கட்டமாக இம்மாதம் 13ஆம் தேதி(இன்று) முதல் 17ஆம் தேதி வரையிலும், இரண்டாம் கட்டமாக 19ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை தினமும் இரண்டு ஷிப்டுகளாக தேர்வுகள் நடைபெறும். முதல் கட்ட தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில், இரண்டாம் கட்டத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு விரைவில் வெளியிடப்படும். அட்மிட் கார்டுகளில் ஏதேனும் பிழைகள் இருந்தால், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.