இன்னும் 4 ஆண்டுகளில்… டிஜிட்டல் பணப் பரிமாற்றத்துக்கு மாறும் இந்தியா…!!!

இந்தியாவில் அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் மின்னணு பரிமாற்றம் அளவு உயரும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் இந்தியாவில் அடுத்த 4 ஆண்டுக்குள் மின்னணு பரிமாற்ற அளவு 71.7% ஆக உயரும் என்று சர்வதேச அளவில் மின்னணு பணப் பரிமாற்ற சேவை அறிமுகம் ஏசிஐ வேர்ல்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் கூறியுள்ளது. தற்போது 61.4% ஆக இருக்கும் ரொக்க பணம் பரிமாற்றம் 4 ஆண்டுகளில் 28.3% ஆக குறையும். 2024 ஆம் ஆண்டு மொத்த பணி பரிமாற்றத்தில் 50க்கு மேல் மின்னணு முறைக்கு வந்துவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.