மத்திய கல்வி அமைச்சகத்தின் சமக்ரா சிக்ஷா திட்ட வேலைகளுக்கு விண்ணப்பிக்க இன்னும் இரண்டு நாட்களே அவகாசம் உள்ளது. ஒப்பந்த அடிப்படையிலான தலைமை கன்சல்டன்ட், மூத்த கன்சல்டன்ட், கன்சல்டெண்ட் ஆகிய பதவிகளில் மொத்தம் 18 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் மாத ஊதியம் 1.20 லட்சம் முதல் 1.50 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 6ம் தேதியே கடைசி நாளாகும்.