காங்கிரஸ் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனின் மகன் ஈவெரா கடந்த ஜன.4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இவர் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். இவருடைய மறைவால் இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அண்மையில் வெளியானது. பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் ஜனவரி 31ஆம் தேதி ஆரம்பமாகிறது.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இபிஎஸ் தரப்புக்கு போட்டியிட தாமாக ஆதரவு அளித்துள்ளது. ஆனால் பாஜக இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்து இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளார். இதனால் ஓபிஎஸ் தனியாக களமிறங்குவாரா அல்லது ஆதரவு அளிப்பாரா என்பதற்கான விடை இன்னும் சற்று நேரத்தில் கிடைத்து விடும்.