இன்னும் சற்று நேரத்தில் தமிழகமே எதிர்பார்க்கும் தீர்ப்பு…. எதிர்பார்ப்பில் அரசியல் கட்சிகள்…..!!!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும் பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓபிஎஸ் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதன் விசாரணையில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டன. கடந்த மார்ச் 22 ஆம் தேதி விசாரணை நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் உயர் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு இன்று காலை 10.30 மணிக்கு வெளியாக உள்ளது. ஓபிஎஸ் அரசியல் வாழ்க்கையை தீர்மானிக்கப்போகும் இந்த தீர்ப்பை எதிர்நோக்கி அரசியல் கட்சியினர் காத்திருக்கின்றனர்.