2023 ஆம் ஆண்டின் முதல் ஐபிஎல் தொடருக்கான டிஜிட்டல் உரிமையை ரிலையன்ஸ் இன் வியாகாம் 18 நிறுவனம் வாங்கியது. இந்நிலையில் அந்நிறுவனம் ஜியோ ஆப் மூலமாக ஐபிஎல் போட்டிகளை ரசிகர்களுக்கு இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளதாக மகிழ்ச்சி செய்தி ஒன்று வெளியாகி உள்ளது.

இதன் மூலம் நாடு முழுவதும் அதிக வாடிக்கையாளர்களை பெற முடியும் என்ற நம்பிக்கையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முன்பு ஐபிஎல் தொடரை ஹாட்ஸ்டாரில் பார்க்க சந்தோஷ் செலுத்த வேண்டும் என்ற நிலை இருந்த நிலையில் தற்போது ஜியோ ஆப் மூலமாக இலவசமாக பார்க்க முடியும் என்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.