இனி 60 வயதுக்கு மேல் கவலையே இல்லை…. மத்திய அரசின் அருமையான பென்சன் திட்டம்…. இதோ முழு விபரம்….!!

மத்திய அரசின் அருமையான பென்ஷன் திட்டம் குறித்து இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.

மத்திய அரசு கடந்த 2015-ம் ஆண்டு அமைப்புசாரா தொழிலாளர்களின்‌ வருங்கால வாழ்க்கைக்கு உதவும் வகையில் பென்சன் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தில் இதுவரை 4 கோடி மக்கள் இணைந்துள்ளனர். இந்தத் திட்டத்தை மத்திய அரசின் நேஷனல் பென்ஷன் ஸ்கீம் நிர்வகிக்கிறது. இந்தத் திட்டம் வயதான காலத்தில் மாதந்தோறும் ஒரு நிரந்தர வருமான தொகையை பெறுவதற்கு உதவுகிறது. இந்தத் திட்டத்தில் 18 வயது முதல் 40 வயதிற்கு உட்பட்டவர்கள் சேரலாம்.

இந்தத் திட்டத்தில் சேர்ந்த நபர் 42 வருடங்களுக்கு மாதம்தோறும் ரூபாய் 210 செலுத்த வேண்டும். இவ்வாறு செலுத்தும் தொகையானது அந்த நபர் 60 வயது பூர்த்தி அடைந்த உடன் மாதந்தோறும் ரூபாய் 5,000 பென்ஷனாக அவரை வந்து சேரும். ஒருவேளை சந்தாதாரர் இறந்துவிட்டால் அவரின் குடும்பத்தினருக்கும் அல்லது அவர் நாமினியாக பதிவு செய்த நபருக்கு பென்சன் தொகை கொடுக்கப்படும். இதில் சேர விரும்புவர்கள் வங்கியின் மூலமாக நேரடியாக பென்ஷன் திட்டத்தில் சந்தாதாரராக ஆகலாம்.

இதனையடுத்து அடல் பென்சன் யோஜனா திட்டத்தின் இணைய தளத்திலும்‌ பதிவு செய்து கொள்ளலாம்.‌ இதை https://enps.nsdl.com/eNPS/NationalPensionSystem.html என்ற இணையதள முகவரியில் பதிந்து கொள்ளலாம். இதில் முதலில் பென்சன் திட்டத்தில் சேரும் நபரின் சுய விவரங்கள் மற்றும் ஆதார் அட்டை எண்ணை பதிவு செய்ய வேண்டும். அதன்பின் மொபைல் எண்ணிற்கு வரும் ஓடிபி எண் வரும். இதனையடுத்து வங்கியின் கணக்கு எண் மற்றும் ஐஎப்எஸ்சி நம்பரை பதிவு செய்ய வேண்டும். இறுதியில் நாம் செலுத்த விரும்பும் மாத சந்தா தொகையை தேர்ந்தெடுக்க வேண்டும். இதன் மூலமாக நீங்கள் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் சந்தாதாரராக ஆகலாம்.