இனி 10 நிமிடத்தில்… ஆன்லைனில் பிறப்புச் சான்றிதழ் பெறலாம்… எப்படி வாங்குவது…? இத பாத்து தெரிஞ்சுக்கோங்க…!!!

பிறந்த குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வாங்குவது ஒவ்வொரு பெற்றோருக்கும் கடமையாகும். அதன்படி ஆன்லைனில் எளிமையான முறையில் பிறப்பு சான்றிதழ் எவ்வாறு வாங்குவது என்பதை அறிந்து கொள்ளலாம்.

பிறப்பு சான்றிதழ் ஆன்லைன் மூலம் வாங்க முதலில் https://etownpanchayat.com/PublicServices/Home.aspx#! என்ற இணையதள முகவரியை கிளிக் செய்து, Birth Certificate → Apply Birth Registration பட்டனை கிளிக் செய்ய வேண்டும். (குறிப்பு: ஸ்டார் குறியீடு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் கட்டாயம் நிரப்ப வேண்டும்)

முதலில் மாவட்டம், பஞ்சாயத்து, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை நிரப்பிய பிறகு குழந்தையின் பிறந்த தேதி, பாலினம், குழந்தையின் பெயர் ஆகியவற்றையும் நிரப்ப வேண்டும்.

அதன்பிறகு பெற்றோரின் விவரங்கள் (Parents Information), நிரந்தர முகவரி (Permanent Address), குழந்தை பிறந்த இடம் (Place of Birth) நிரப்ப வேண்டும்.

பின்னர் குழந்தையின் தாயின் நிரந்தர இருப்பிட முகவரி (Permanent Residence of Mother), தந்தையின் கல்வித்தகுதி (Father’s Education), தந்தையின் வேலை (Father’s Occupation), தாயின் கல்வித்தகுதி (Mother’s Education), தாயின் வேலை (Mother’s Occupation), தாயின் வயது திருமணத்தின் போது (Age of Mother at time of marriage), தாயின் வயது குழந்தை பிறந்த பின் (Age of Mother at time of this Birth), உயிருடன் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை (No. of Children Born Alive), பிறந்த குழந்தையின் எடை (Child Weight), குழந்தை பிறந்த பிரசவ முறை (Method of Delivery), பிரசவத்தை பார்த்தவர்கள் (Type of Attention at Delivery), கர்ப்பத்தின் காலம் [வாரங்களில்] (Duration of Pregnancy [in Weeks]) ஆகியவற்றை சரியாக நிரப்ப வேண்டும்.

நிரப்பிய விபரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை ஒருமுறைக்கு பலமுறை சரிபார்த்த பின்னர் Submit பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

அதன்பிறகு உங்களுடைய திலைபேசி எண்ணிற்கு ஒப்புகை எண் (Acknowledgement Number) வரும். அதனை கொண்டு மீண்டும் Birth Details -> Birth Certifcate Search Option-ஐ கிளிக் செய்து அதில் காட்டப்படும் தகவல்களை நிரப்பிய பின்னர் Generate பட்டனை கிளிக் செய்தால் உங்களின் பிறப்பு சான்றிதழ் (Birth Certificate) தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேற்கண்ட வழிமுறைகள் அனைத்தும் பிறந்த குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வாங்குவதற்கு பயன்படும். ஒருவேளை நீங்கள் அப்போது வாங்கவில்லை, காலங்கள் கடந்த பின்பு வாங்கவேண்டும் என்றால், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தான் வாங்க முடியும்.

விண்ணப்பிக்கும் இணையமுகவரி:
https://etownpanchayat.com/PublicServices/Home.aspx#!
பயன்கள்: முதன் முதலில் குழந்தைகள் பள்ளியில் சேர்த்துவதர்க்கும் மற்றும் பாஸ்போர்ட் எடுப்பதற்கும் தேவைப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *