பெங்களூருவில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறது. இதனால் இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது. பள்ளிகளின் நேரமும், அலுவலகத்தின் நேரமும் ஒரே நேரத்தில் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறது. எனவே பள்ளிகள் நேரத்தை மாற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் ஆலோசனை வழங்கியது. இதனை அடுத்து நீதிமன்ற உத்தரவை கருதி கல்வித்துறை அமைச்சர் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

பெங்களூருவில் தற்போது பள்ளிகள் காலை .8 45 மணிக்கு தொடங்கி மாலை 3 மணி 4:00 மணிக்கு முடிவடைகிறது. எனவே ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவோ அல்லது தாமதமாகவோ பள்ளிகளை தொடங்க ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கல்வித்துறையின் இந்த அறிவிப்புக்கு பெற்றோர்களும் தனியார் பள்ளி நிர்வாகிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த மாற்றத்தால் மாணவர்கள் சீக்கிரம் எழ வேண்டிய நேரம் இருக்கிறது. பெற்றோர்கள் பணிக்கு சென்றால் பிள்ளைகளை தயார் செய்வது கஷ்டமாக இருக்கும். மேலும் பிள்ளைகள் உறங்கும் நேரமும் குறையும் . இதனால் மாணவர்கள் ஆரோக்கியம் குறையும் என்று கவலையடைந்துள்ளனர்.