இனி வீடு தேடிச் சென்று கொரோனா தடுப்பூசி… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

பாகிஸ்தானில் 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு வீடு தேடிச் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிராக தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பு ஊசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இந்தியா கண்டறிந்துள்ள கொரோனா தடுப்பு ஊசிகள் உலக நாடுகள் அனைத்திற்கும் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இருந்தாலும் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு ஊசி போட்டுக் கொள்வதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள்.தற்போது நாடு முழுவதும் அனைத்து தரப்பினருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பாகிஸ்தானில் 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு வீடு தேடிச் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி மையங்களை அடைவதற்கும் வரிசையில் காத்திருப்பதற்கு மூத்த குடிமக்கள் எதிர்கொள்ளும் சிரமத்தை மனதில் கொண்டு 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு வீடு தேடிச் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.