உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புது விதமான அப்டேட்டுகளை வாட்ஸ் அப் நிறுவனம் வழங்கி வருகிறது. இந்நிலையில் ஸ்பேம் அழைப்புகளை சரிபார்க்க வாட்ஸ் அப் விரைவில் “சைலன்ஸ் அண் நோன் கால்லர்ஸ்”என்ற புதிய அம்சத்தை கொண்டு வர உள்ளது.
இது நமது தொடர்பு எண்ணில் இல்லாத எண்ணில் இருந்து வாட்ஸ் அப்பில் அழைப்பு வந்தால் ரிங் செய்வதை தடுக்கிறது. உங்களுக்கு அழைப்பு அறிவிப்பை வழங்குகிறது. தேவைப்பட்டால் அந்த எண்ணை மீண்டும் நீங்கள் அழைக்கலாம். தற்போது தொழில் நுட்ப வடிவமைப்பு பணி நிலையில் உள்ள இந்த அம்சம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.