இனி ரொம்ப Easy… ஆசிரியர்கள் Leave எடுக்க புதிய செயலி…. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிமுகம்…!!!

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் 35,000 பள்ளிகள் இருக்கின்றன. இவற்றில் இரண்டு லட்சம் ஆசிரியர்கள் வீதம் பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில் இவர்கள் விடுமுறை கோரி விண்ணப்பிப்பதற்கு தனி செயலியை பள்ளி கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலியை ஆசிரியர்கள் தங்கள் செல்போன்களிலேயே பதிவிறக்கம் செய்து அதன் மூலமாக விடுப்புக்கு பதிவு செய்யலாம்.

தலைமையாசிரியர்கள் கணினியின் வாயிலாக அதை சரி பார்த்து விடுப்புக்கு ஒப்புதல் அளிப்பார்கள். ஆசிரியர்கள் விடுமுறைக்கான TN-SED Schools App என்ற புது செயலி வாயிலாக மீதம் இருக்கும் விடுமுறை நாட்கள், மருத்துவ விடுப்பு நாட்கள் சாதாரண விடுமுறை நாட்கள் என அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ள முடியும்.