நியாய விலை கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்களும் இதனை வாங்கி பயன் அடைந்து வருகின்றனர். அது மட்டுமின்றி பேரிடர் காலங்களிலும் ரேஷன் கடை மூலமாக மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது.

ரேஷன் பொருட்கள், பொங்கல் பரிசு தொகுப்பை பெற முடியாத ரேஷன் அட்டைதாரர்கள் வேறு நபர்கள் மூலம் பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு ‘அங்கீகாரசான்று’ என்று குறிப்பிட்டு, உணவு பொருள் வழங்கல் துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பத்தில் விபரங்களை குறிப்பிட்டு கையெழுத்திட்டு. அந்த நபரிடம் கொடுக்க வேண்டும். அவர் அந்த சான்றை ரேஷன் கடையில் காண்பித்து பொருளை பெறலாம்.