“இனி ரசிகர்களை தலைகுனிய விட மாட்டேன்”….. உணர்ச்சிபூர்வமாக பேசிய நடிகர் சிம்பு….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள பத்து தல திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது மேலும் அதிகரித்துள்ளது. ஓபெலி என்.கிருஷ்ணா இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். கௌதம் மேனன் மற்றும் கௌதம் கார்த்திக் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்துள்ள நிலையில் வருகின்ற மார்ச் 30-ம் தேதி படம் வெளியாகிறது.

இந்நிலையில் நேற்று படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய சிம்பு, இனி தனது ரசிகர்களை தலைகுனிய விட மாட்டேன் என்று கூறினார். ரசிகர்கள் இனி எனக்காக எதுவும் செய்ய வேண்டாம். நான் தமிழ் சினிமா, தமிழ் மக்கள் பெருமைப்படும் அளவிற்கு நிச்சயம் வருவேன். இனி எப்படி நான் வருகிறேன் என்பதை மட்டும் பாருங்கள் என உணர்ச்சிபூர்வமாக பேசினார். முன்பு உடல் எடை அதிகரிப்பு காரணமாக சிம்பு பல கேலி கிண்டலுக்கு ஆளானார்.

Leave a Reply