இனி முதல்வரை விட ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம்… ஜனாதிபதி ஒப்புதல்..!!

டெல்லி துணை நிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

டெல்லியில் முதல்வரை விட துணைநிலை ஆளுநருக்கு அதிக அதிகாரங்கள் வழங்கும் தேசிய தலைவர் டெல்லி மசோதா 2021 கொண்டுவரப்பட்டது. இதன் காரணமாக முக்கிய முடிவுகளை எடுக்க துணைநிலை ஆளுநர் இடம் முதல்வர் அனுமதி கேட்பது அவசியமானதாகும். அதாவது முதல்வரிடம் துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்தால் மட்டுமே அந்த முடிவுகள் எடுக்க முடியும் என்ற நிலை உருவாகும்.

இந்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு மார்ச் 22 இல் நிறைவேற்றப்பட்டது. கடும் அமளிக்கு மத்தியில்  புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் மசோதா சட்டமாக உள்ளது. இந்த சட்டம் எப்போது அமலுக்கு வரும் என்பது பற்றி மத்திய உள்துறை அமைச்சகம் இனி  அறிக்கை வெளியிடும்.