வாட்ஸ் அப் போன்ற சோசியல் மீடியா தளங்களை பயன்படுத்தாத நபர்களே இல்லை என கூறலாம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இப்போது வாட்ஸ் அப்பில் தங்களுக்கு பிடித்தவர்களுடன் பேசுகின்றனர். இந்த நிலையில் வாட்ஸ் அப்பில் தவறான தகவல்கள் பரவுவதை தடுக்கும் பொருட்டு இமேஜ் சர்ச் என்ற அம்சத்தை மெட்டா அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதன் மூலம் வாட்ஸ் அப்பில் வரும் புகைப்படங்கள் எடிட் செய்யப்பட்டதா தவறாக சித்தரிக்கப்பட்டதா என்பதை நாம் எளிதில் கண்டுபிடிக்கலாம். வாட்ஸ் அப்பில் இருக்கும் 3 புள்ளியை கிளிக் செய்து சர்ச் ஆன் வெப் அம்சத்தை பயன்படுத்தி அது உண்மையா என்பதை கண்டறியலாம்.