“இனி பேனர் கட் அவுட் வைக்க கூடாது”…. அப்படி வச்சிங்கன்னா நா வரமாட்டேன்… எச்சரிக்கும் ஸ்டாலின்..!

திமுக நிகழ்ச்சிக்காக கட்சியினர் யாரும் பேனர் வைக்கக்கூடாது என மு க ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.  

சென்னை குரோம்பேட்டையை  சேர்ந்த  இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23) என்பவர்  ஒரு பொறியியல் பட்டதாரி.  கந்தன்சாவடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவர் பணி முடிந்து பள்ளிக்கரணை வழியாக சாலையில் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர்களில் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்துள்ளது. இதனை எதிர்பார்க்காத  சுபஸ்ரீ சாலையில் தூக்கி வீசப்பட்டார். அந்த நேரத்தில் பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது ஏறியதில் பரிதாபமாக பலியானார்.

Seithi Solai

இதையடுத்து  சுபஶ்ரீ மறைவுக்கு திமுக முக ஸ்டாலின் சமூக வலைத்தளங்களில் ஒரு கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் முக ஸ்டாலின் தற்போது மீண்டும் ஒரு அறிக்கையில், திமுக நிகழ்ச்சிக்காக கட்சியினர் யாரும் பேனர் வைக்கக்கூடாது என மு க ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

Image result for ஸ்டாலின் கோபம்

அறிவுரையை மீறி திமுகவினர் பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நிகழ்ச்சியோ,  கூட்டமா எதுவாக இருந்தாலும் பேனர் வைக்க கூடாது. ஒன்று அல்லது இரண்டு பேனர்களை விளம்பரத்திற்காக உரிய இடத்தில் அனுமதி கேட்டு வைக்க வேண்டும். வாகன ஓட்டிகள் பொதுமக்களுக்கு பேரிடர் ஏற்படும் வகையில் பேனர், கட் அவுட் வைப்பதை  என்னால் ஏற்க முடியாது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பேனர்கள் வைப்பது அறவே நிறுத்த வேண்டும். இதை மீறி பேனர் வைத்தால் நிகழ்ச்சிக்கு வர மாட்டேன் என்று அதிரடியாக உத்தரவுட்டுள்ளார்.