“இனி பெண்கள் பிங்க் நிற பேருந்தில் பயணிக்கலாம்”….. நாளை முதல் தொடக்கம்…. தொடங்கி வைக்கிறார் உதயநிதி….!!!!

இலவச பயணத்தை அடையாளம் காட்டும் வகையில் சென்னையில் பிங்க் நிற சேவை பேருந்து உதயநிதி ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கின்றார்.

தமிழகத்தில் சாதாரண அரசு பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணிக்கும் வசதி தற்போது அமலில் உள்ளது.  ஆனால் அவசரத்தில் சில பெண்கள் டீலக்ஸ், சொகுசு பேருந்துகளில் ஏறி விடுகின்றன. இதனால் இந்த குழப்பத்தை போக்கும் வகையில் பெண்களுக்கு இலவசமாக பயணிக்கும். சாதாரண கட்டண பஸ்ஸின் நிறத்தை பிங்க் நிறமாக மாற்றம் செய்யும் நடவடிக்கையை காவல்துறை மேற்கொண்டது.

இந்நிலையில் பிங்க் நிற பஸ் இயக்கத்தை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அலுவலகம் அருகே நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மேலும் அவர் ஓமந்தூர் அரசு கண்ணோட்டம் மருத்துவமனை மெட்ரோ ரயில் நிலைய வளாகத்தில் இருந்து மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு 5 இணைப்பு மினி பஸ்கள் இயக்கத்தையும் கொடியசைத்து வைத்து தொடங்கி வைக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *