“இனி பாஸ்வேர்டை பகிரக்கூடாது”…. மீறினால் உடனடி கட்டணம்… NETFLIX நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு….!!!

உலகம் முழுவதும் பிரபலமான ஓடிடி தளமாக netflix இருக்கிறது. இதில் திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள், தொலைக்காட்சி தொடர்கள் என வாடிக்கையாளர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப நிகழ்ச்சிகள் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக netflix நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் 25 கோடி பயனாளர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் நெட்பிளிக்ஸ் தளத்தின் பாஸ்வேர்டை ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் தங்களுடைய செல்போன் மற்றும் லேப்டாப்பில் பயன்படுத்தி பார்க்கலாம்.

ஆனால் இப்படி பார்ப்பதால் நிறுவனத்திற்கு வருமான இழப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக பாஸ்வேர்டை யாரும் பகிரக்கூடாது எனவும் அப்படி பகிர்ந்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வெளிநாடுகளில் பாஸ்வேர்டை பகிரும்போது இந்திய மதிப்பில் ரூபாய் 250 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில்  எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும் என்ற விவரம் வெளியாகவில்லை. அதன் பிறகு இந்த புதிய நடைமுறை மார்ச் மாதத்தில் இருந்து அமலுக்கு வர இருக்கிறது. மேலும் இந்த அறிவிப்பை புதிய தலைமை நிர்வாகிகளாக பொறுப்பேற்றுள்ள கிரெக் பீட்டர்ஸ், ரெட்‌ சரண்டோஸ் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.