ஒரு நாடு ஒரு தேர்தல் திட்டத்திற்கு தயார் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா உறுதியளித்துள்ளார்.
கடந்த நவம்பரில் ஒரு நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி பரிந்துரை செய்தார். அடிக்கடி நடைபெறும் தேர்தல்களினால் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படுவதாக பிரதமர் மோடி இந்த திட்டத்தை முன்வைத்தார். இந்த நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு தேர்தல் ஆணையம் தயார் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆங்கில தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், ஒரு நாடு ஒரு தேர்தல் திட்டத்திற்கு தயாராக இருப்பதாகவும் இது தொடர்பாக கொண்டு வரப்பட்ட சட்டத்தில் திருத்தங்களையடுத்து தேர்தல் ஆணையம் இந்தத் திட்டத்திற்கு தயாராகவே உள்ளதாகவும் குறிப்பிட்டார். எனினும் ஒரு நாடு, ஒரு தேர்தல் திட்டம் குறித்த ஆழமான ஆய்வும், பரிசீலனையும் அவசியம் என்றும் அவர் வெளியிட்டுள்ளார்.