இனி தினமும் 40,000…. ஐயப்ப பக்தர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்…!!!

சபரிமலையில் தரிசனம் செய்வதற்கு ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 40 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலையில் மண்டல பூஜைக்காக கடந்த 15ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு தினமும் சிறப்பு பூஜை நடந்து வருகிறது. அங்கு தினமும் 30 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மூலம் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். மழை காலமாக இருப்பதாலும் பக்தர்கள் தங்க அனுமதிக்கப்படாத காரணத்தாலும் பக்தர்கள் வருகை குறைவாகவே உள்ளது. இந்தநிலையில் ஐயப்ப பக்தர்களின் அடிப்படை வசதி தொடர்பாக கேரள தேவஸ்தான துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் எருமேலி, நிலக்கல் மற்றும் பம்பை ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.

தொடர்ந்து பம்பை நுணங்கார் தற்காலிக பாலம் கட்டும் பணிகளை செய்த பிறகு அவர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராதாகிருஷ்ணன், சபரிமலையில் தரிசனம் செய்வதற்கு ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 40 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அதே போல் உடனடி முன்பதிவு மூலமாக தினசரி 5 ஆயிரம் பக்தர்கள் கூடுதலாக அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.