இனி டிக்கெட் எடுக்க… whatsapp மூலம் Hi அனுப்பினால் போதும்…. சூப்பர் அறிவிப்பு …!!!

சென்னையில் உள்ளவர்களுக்கும், வெளியூரில் இருந்து வரும் பயணிகளுக்கும், வேலைக்கு செல்வதற்கும், பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களுக்கும் மெட்ரோ ரயில் பயணம் நம்பிக்கையான பயணமாக உள்ளது..மேலும் பயணிகளுக்காக பல்வேறு வசதிகளும் மெட்ரோ ரயில் நிர்வாகம் மூலம் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 42 ரயில்கள் இரண்டு வழித்தடங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இதில் 15 பெண்கள் உட்பட 180 டிரைவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த நிலையில்  வாட்ஸ் அப் மூலமாக டிக்கெட் எடுக்கும் வசதியை மெட்ரோ ரயில் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்கிறது. வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து பயணிகள் எளிதாக பயணச் சீட்டை பெறும் வகையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பொதுவான கைப்பேசி எண் வழங்கப்படும். அந்த எண்ணிற்கு வாட்ஸ் அப் மூலம் Hi என sms அனுப்பினால் ( chatboard) என்ற முகப்பு பக்கம் வரும். அதில் பயணச் சீட்டை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.