இனி செல்போன் தண்ணீரில் விழுந்தா கவலைப்படாதீங்க… பைசா செலவில்லாமல் ஈஸியா சரி பண்ணலாம்…!!

உங்கள் போன் தண்ணீரில் விழுந்து விட்டால் அதிக பணத்தை செலவிடாமல் எளிய முறையில் போனை சரி செய்வது எப்படி என்பதை இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.

தற்போது போன் இல்லாமல் யாருமே இல்லை. அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் ஒரு பொருளாகவே போன் மாறிவிட்டது. இன்றைய இளம் தலைமுறையினர் எப்பொழுதும் போனை வைத்து அதை அதிக அளவு உபயோகித்து கொண்டேதான் இருக்கின்றன. ஏன் பாத்ரூமுக்குச் செல்லும் போது கூட செல்போனை எடுத்து சென்று வீடியோ பார்ப்பது, சேட் செய்வது போன்ற செயல்களை செய்து வருகின்றனர். அப்படி செய்யும் போது ஒரு சில சமயம் தவறி போன் தண்ணீரில் வாய்ப்பிருக்கும்.

அப்படி தண்ணீரில் விழுந்த போனை நாம் அதிக அளவு பணம் கொடுத்து செலவு செய்ய வேண்டி இருக்கும். ஒரு சில நபர் இந்த போன்க்கு இவ்வளவு செலவு செய்வதற்கு பதிலாக புதிய போனை வாங்கி விடலாம் என்று எண்ணி அந்த போனை அப்படியே மூலையில் போட்டு விடுகின்றனர். ஆனால் அந்த போனை எளிய முறையில் சரி செய்யலாம். முதலில் தண்ணீரில் விழுந்த போனை எடுத்து உங்களது போனை சுவிட்ச் ஆப் செய்ய வேண்டும். பின்னர் செல்போனை கலட்ட முடிந்தால் அதை கழட்டி சிம்கார்டு, மெமரி கார்டு, பேட்டரி போன்றவற்றை தனித்தனியாக கழட்டி ஒரு துணியை வைத்து துடைக்க வேண்டும்.

பின்னர் ஒரு பையில் அரிசி எடுத்து அதை அந்த போனை மூழ்க வைத்து 48 மணி நேரம் அப்படியே வைத்துவிட வேண்டும். அவ்வாறு செய்யும் போது நமது போனில் உள்ள ஈரம் உறிஞ்சப்படுகிறது. பின்னர் சிறிது நேரத்தில் அந்த போனை எடுத்து ஸ்விட்ச் ஆன் செய்து உபயோகப்படுத்தலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *