“இனி சிவகார்த்திகேயன் ரொம்ப பிஸி”… வெளியான எஸ்.கே-22 படத்தின் அப்டேட்…!!!!!

சிவகார்த்திகேயனின் இருபத்தி இரண்டாவது திரைப்படத்தின் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சிவகார்த்திகேயன். இவர் முதலில் சின்னத்திரையில் அறிமுகமாகி பின் வெள்ளித்திரையில் அறிமுகமானார். இவர் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரின் மனதிலும் இடம் பிடித்துள்ளார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான டான் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த செய்தி வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தை இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்க கதாநாயகியாக சமந்தா அல்லது கியாரா அத்வானி நடிக்கலாம் என சொல்லப்படுகின்றது. மேலும் இத்திரைப்படத்தில் இயக்குனர் மிஷ்கின் நடிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகின்றது.

சிவகார்த்திகேயனின் 22-வது திரைப்படமான இத்திரைப்படம் குறித்து தற்போது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அது என்னவென்றால் இத்திரைப்படத்தின் பூஜையானது நாளை நடைபெற இருக்கின்றதாம். சிவகார்த்திகேயன் தற்போது தனது 21-வது திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் இருபத்தி 22-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் ஒரே நேரத்தில் இரு திரைப்படங்களில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *