ஐக்கிய அரபு அமீரகத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் கருக்கலைப்பு செய்து கொள்ள அனுமதி வழங்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதற்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த சட்டத்தின் படி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் உடனடியாக புகார் அளிக்க வேண்டும்.

அதன் பிறகு பாலியல் வன்கொடுமையினால் கர்ப்பமானால் 120 நாட்களுக்குள் கர்ப்பத்தை கலைத்து விட வேண்டும். மேலும் இந்த சட்டமானது பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் உறவினர்களின் கட்டாயத்தினால் பாலியல்  வன்கொடுமைக்கு ஆளாகி கர்ப்பமான பெண்கள் ஆகியோர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.