தமிழகத்தில் மனித கழிவுகளை அகற்றும் தொழில் புரிவோர்தடுப்பு மற்றும் அவர்களது மறுவாழ்வு சட்டம் 2013-ன் படி கழிவு நீர் தொட்டியில் எந்த ஒரு சூழ்நிலையிலும் இறங்குவது தடை செய்யப்பட்டது. கழிவுநீர் தொட்டியை இயந்திரங்களால் மட்டுமே சுத்தம் செய்ய வேண்டும் எனவும் எந்த ஒரு உள்ளாட்சி அமைப்பு அல்லது எந்த ஒரு நிறுவனமும் நேரடியாக அல்லது மறைமுகமாக எந்த ஒரு பணியாளரையும் அபாயகரமான கழிவு நீர் கட்டமைப்புகள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தக் கூடாது என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மீறுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் முதன்முறையாக மீறினால் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது இரண்டு லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். இரண்டாவது முறையும் மீறினால் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ஐந்து லட்சம் ரூபாய் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.