“இனி எலக்ட்ரிக் கார் பேட்டரியை ரீசார்ஜ் செய்ய வேண்டாம்”…. இந்தியன் ஆயில் நிறுவனத்தின் அசத்தல் கண்டுபிடிப்பு….!!!

உலக அளவில் ஆட்டோமொபைல் துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. கார்பன் உமிழி பயன்பாட்டை குறைப்பதற்காக எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஆனால் சில சமயங்களில் எலக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்யும் போது அவை வெடிக்கும் அபாயமும் நிகழ்கிறது. இதன் காரணமாக இந்தியன் ஆயிள் நிறுவனம் பேட்டரிகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. அதாவது லித்தியம் அயன் பேட்டரிகளுக்கு பதிலாக அலுமினியம் ஏர் பேட்டரிகளை தயாரிக்கும் பணியில் இந்தியன் ஆயில் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

இந்த அலுமினியம் பேட்டரிகளை மின்சாரம் மூலம் சார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. கேஸ் சிலிண்டரை போல் மாற்றிக் கொள்ளலாம். இந்த பேட்டரிகள் 2024-ம் ஆண்டின் இறுதியில் பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் ஏர் பேட்டரிகளை கேஸ் சிலிண்டர்கள் போன்று மாற்றிக் கொள்வதால் சார்ஜ் செய்வதால் ஏற்படும் பிரச்சனைகள் வராது என்று இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ஆராய்ச்சி துறை இயக்குனர் ராம்குமார் கூறியுள்ளார்.

Leave a Reply