தமிழகத்தில் கொத்தடிமை தொழிலாளர்களை பணியில் அமர்த்தினால் மூன்று வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. கொத்தடிமை தொழிலாளர்களை பணியில் அமர்த்துவதற்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 2000 ரூபாய் அபராதம் விதிக்க கொத்தடிமை தொழிலாளர் முறை சட்டத்தின் வகை செய்யப்பட்டுள்ளது. 18 வயது நிறைவடையாத குழந்தை மற்றும் பலரிடம் பருவத்தினரை கொத்தடிமை பணிகளில் ஈடுபடுத்தினால் 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் அல்லது ஆறு மாதங்களுக்கு குறையாமல் மற்றும் இரண்டு வருடங்கள் சிறை தண்டனை அல்லது இவை இரண்டும் விதிக்கப்படும்.

தமிழகத்தில் இனிவரும் காலங்களில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட கண்காணிப்பு குழு மற்றும் மாவட்ட தடுப்பு படையினரால் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். தமிழகத்தை கொத்தடிமை தொழிலாளர்கள் மற்றும் குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக உருவாவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அரசு தெரிவித்துள்ளது.