இனி இவர்களுக்கு கிடையாது…. ரேஷன் விதிகளில் அதிரடி மாற்றம்…. மக்களுக்கு முக்கிய அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் ரேஷன் கார்டு திட்ட மூலம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை மக்கள் மலிவான விலையில் வீட்டு உபயோக பொருட்களை பெற்று பயன்பெறுகின்றன. இந்த ரேஷன் கார்டை பெறுவதற்கு சில நிபந்தனைகள் உள்ளது. அதன்படி தகுதியுடையவர்களுக்கு மட்டும் ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. இந்நிலையில் வசதி படைத்தவர்களும் ரேஷன் கார்டு மூலம் பயன் பெற்று வருவதாக புகார்கள் எழுந்து உள்ளது. இவர்கள் ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் சமையல் எண்ணெய், பருப்பு, கோதுமை, சர்க்கரை மற்றும் மளிகை பொருட்கள் போன்றவற்றை குறைந்த விலையில் வாங்கி, அவற்றை வெளிச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.

இதனால் உண்மையில் தகுதி பெற்ற ஏழை மக்களுக்கு ரேஷன் பொருட்களும் அரசின் சலுகைகளும் கிடைக்காமல் போகிறது. இதனை சரி செய்ய மதிய உணவு வழங்கல் ரேஷன் கார்டு தொடர்பான விதிகளை அரசு மாற்றம் உள்ளது. இது குறித்து மத்திய அரசு மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதனையடுத்து விரைவில் வறுமை கோட்டின் தரத்தை அரசு மாற்றுப் போவதாக தகவல் வெளிவந்துள்ளது. இதன் மூலம் வறுமை கோட்டின் பட்டியலில் இருந்து பலரும் வெளியேற வாய்ப்பு உள்ளது. அதனைத் தொடர்ந்து விதிகளை மாற்றிய பிறகு புதிய தரநிலைகளை அமல்படுத்திய பின் தகுதியான பயனாளிகளின் பட்டியலை மத்திய அரசு விரைவில் வெளியீடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ரேஷன் கடைகளில் நடைபெறும் மோசடிகள் தவிர்க்கப்பட்டு, தகுதி உடைய மக்களுக்கு சரியாக பொருட்கள் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.