தமிழகத்தில் ஒப்பந்த பணியாளர்களுக்கும் மகப்பேறு சலுகை தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. நிரந்தர பணியாளர் அல்ல எனக் கூறி பெண்ணுக்கு மகப்பேறு சலுகை வழங்க மறுக்க முடியாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை உயர்நீதிமன்றம் இரு நீதிபதிகள் அமர்வு உறுதி செய்தது. அதோடு பிரசவத்தின் போது பெண்ணுக்கு இருவது எலும்புகள் ஒரே நேரத்தில் உடைவதை போன்ற வேதனை ஏற்படும் எனவும் கருத்து தெரிவித்தனர். எனவே இதனை தொடர்ந்து ஒப்பந்த பணியாளர்களுக்கு மகப்பேறு சலுகை தர சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.