இனி இலவச மருத்துவம்…? தமிழக முதல்வரின் முடிவுக்கு…. நீதிமன்றம் பாராட்டு…!!

அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் என்ற முதல்வர் எடப்பாடியின் செயலை நீதிமன்றம் பாராட்டியுள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு பள்ளிமாணவர்களின் மருத்துவ கட்டணத்தை அரசே ஏற்றுக்கொள்ளும் என்று உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு கல்விக் கட்டணத்தை அரசே ஏற்பதால் மக்களுக்கு சேவையாற்றும் மருத்துவர்கள் அதிக அளவில் வருவார்கள் என்று உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று முதல்வரின் முடிவு பாராட்டுக்குரியது. மருத்துவ  சீட்டுக்காக அதிகம் செலவு செய்பவர்கள் சம்பாதிப்பதிலேயே குறியாக இருப்பார்கள் என்று கூறியுள்ளது.

இது மாதிரி அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ செலவை அரசு ஏற்பதனால், அதன் மூலமாக படித்து வெளியே  வரும் மருத்துவர்கள் எல்லாம் ஏழையாக இருந்து வந்தவர்களால் என்பதனால் அவர்களுக்கு ஏழைகள் படும் கஷ்டங்கள் எல்லாம் தெரியும். எனவே ஏழைகளுக்கு உதவ கூடிய மருத்துவர்கள் அதிகரித்தால், மிக விரைவில் தமிழகத்தின் பல பகுதிகளில் இலவச மருத்துவத்தை எதிர்பார்க்கலாம்.

உதாரணத்துக்கு சென்னையில் 5 ரூபாய் டாக்டர் ஏழை மக்களுக்கு மருத்துவ சேவை செய்து வந்தார். எனவே இதுபோன்று அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக  தமிழக முதல்வர் மருத்துவ கட்டணத்தை ஏற்று கொண்டதற்கு நீதிமன்றம் பாராட்டியுள்ளது. இனி வரக்கூடிய காலகட்டத்திலும் அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் செயல் தொடர்ந்து தமிழக அரசு செய்து வர வேண்டும் என்பது அனைவரின் ஆசையாகும்.