இனி இருந்த இடத்திலேயே…. மாநிலம் முழுவதும் கியூ.ஆர் கோடு மூலம் மருத்துவ வசதி…. அரசு புதிய அதிரடி….!!!!

பெங்களூருவில் சாலை போக்குவரத்தின் போது உடனடியாக மருத்துவ சேவை பெறுவதற்கு கியூ ஆர் கோடு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள நகரங்களின் பட்டியலில் எப்போதுமே பெங்களூர் தான் முன்னிலையில் இருக்கும். அங்கு போக்குவரத்து நெரிசலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சிக்கி தவிக்கின்றனர்.அப்படிப்பட்ட நேரத்தில் திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்படும் ஓர் முதலுதவி சிகிச்சை பெற முடியாமல் அவதிப்படுகிறார்கள்.

இந்நிலையில் இதற்காக பெங்களூரு போக்குவரத்து போலீசார் புதிய தீர்வை கொண்டு வந்துள்ளனர். அதாவது பெங்களூரு முழுவதும் உள்ள போக்குவரத்து விளக்கு கம்பங்களில் போக்குவரத்து போலீசாரும்,மணிப்பால் மருத்துவமனையும் இணைந்து போக்குவரத்து நெரிசலில் சிக்கி இருக்கும்போது மருத்துவ உதவி தேவைப்படுபவருக்கு உதவும் வகையில் அவர்கள் தொடர்பு கொள்ள qr கோடு ஒட்டி உள்ளனர்.இதன் மூலமாக அவசர உதவி எண்ணிற்கு தொடர்பு கொண்ட ஆம்புலன்ஸ் மூலம் தாங்கள் இருக்கும் இடத்திலேயே மருத்துவ உதவிகளை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.