இனி இந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கிடையாது…. மத்திய அரசு திடீர் அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அரசு கல்வி உதவித்தொகை வழங்கி வருகின்றது. அவ்வகையில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகை தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேசிய கல்வி உதவித்தொகை இணையதளம் மூலமாக பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில்,மத்திய அரசின் 2009 ஆம் ஆண்டு கல்வி உரிமை சட்டத்தின் படி எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கட்டாயம் மற்றும் இலவச கல்வி வழங்கப்பட்டு வருகிறது.

இதனால் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகம் பழங்குடியின விவகார அமைச்சகம் சார்பாக எட்டாம் வகுப்பு வரை படிக்கும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. 9, 10 ஆ வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்படும். அதனைப் போலவே சிறுபான்மையின மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவித் தொகையும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.