இனி இந்த தொல்லை இருக்காது… தேவையில்லாத அழைப்புகள், செய்திகளை தடுக்க அதிரடி திட்டம்….!!!!

தேவையில்லாத தொலைபேசி அழைப்புகள் மற்றும் செய்திகளை தடுப்பதற்காக நடவடிக்கைகளை டிராய் கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தொல்லை தரும் தேவையற்ற தொலைபேசி அழைப்புகள் மற்றும் செய்திகளை தடுப்பதற்காக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது. ஸ்பேம் செய்திகள் மற்றும் பதிவு செய்யப்படாத டெலி மார்க்கெட்டர்களிடமிருந்து வரும் அழைப்புகள் பற்றிய பரவலான புகார்களுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதாவது செயற்கை நுண்ணறிவு, இயற்கை கற்றல் தொழில்நுட்பம் மற்றும் ஸ்பேம் கண்டறிதல் அமைப்பு ஆகியவற்றின் உதவியுடன் பதிவு செய்யப்படாத டெலி மார்க்கெட்டர்களிடமிருந்து தேவையற்ற அழைப்புகள் மற்றும் செய்திகளை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். டிராய், ரிசர்வ் வங்கி, செபிமற்றும் நுகர்வோர் விவகார அமைச்சகம் ஆகியவை நிதி மோசடிக்கு வழிவகுப்பதால் தேவையற்ற அழைப்புகள் மற்றும் செய்திகளை கட்டுப்படுத்த ஒரு கூட்டு செயல் திட்டத்தை கொண்டுவர தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.