இனி இதெல்லாம் செயல்படும்…. கட்டுப்பாடுகளை தளர்த்திய பிரிட்டன்…. மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த பிரதமர்…!!

பிரிட்டனில் கொரோனா பரவலால் போடப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு கூறிய தகவல் கிடைத்துள்ளது.

பிரிட்டனில் கொரோனா பரவலின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகின்றது. இதனால் அந்நாட்டில் போடப்பட்டிருந்த கட்டுப்பாடுகளும் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போதிருந்து வீடுகளில் நடக்கும் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளில் 6 பேர் வரை கலந்து கொள்ளலாம் என்றும், டென்னிஸ் மற்றும் கோல்ப் உள்ளிட்ட விளையாட்டு திடல்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது குறித்து மக்களுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

அவையாவன “மக்கள் முடிந்தவரை வீடுகளிலிருந்து வேலை செய்ய முயற்சி செய்ய வேண்டும் மற்றும் வெகு தூரம் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும், அதுமட்டுமின்றி தொடர்ந்து கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும், மேலும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு அரசு அழைக்கும்போது கண்டிப்பாக அனைவரும் முன் வர வேண்டும்” என்று கூறியுள்ளார். இதனையடுத்து பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் மூன்றாவது அலை பரவி வருவதால் மக்கள் எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கோரிக்கையும் வைத்துள்ளார்.