இனி இது கொண்டு வந்தால்….. பெட்ரோல் வழங்க தடை….. போலீஸ் புதிய அதிரடி…..!!!!!

தமிழகத்தில் கோவை,சேலம் மற்றும் மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. அதனால் மாநில முழுவதும் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு போலீஸ் பாதுகாப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது.கடந்த மூன்று நாட்களாகவே பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் பெட்ரோல் பங்குகளுக்கு போலீசார் அறிவுரை வழங்கியுள்ளனர். அதாவது கேன் மற்றும் பாட்டில்களில் பெட்ரோல் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.அவ்வாறு கேன்களில் பெட்ரோல் வாங்க வரும் நபர்களின் விவரங்கள் குறித்த தகவல் உடனுக்குடன் தெரிவிக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.எனவே திண்டுக்கல் நகர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகளில் பாட்டிலில் பெட்ரோல் வழங்கப்பட மாட்டாது என குறிப்பிட்ட போஸ்டரும் ஒட்டப்பட்டுள்ளது.